2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஆசிரியர்களுக்கு விடுதி அமைத்துத் தருமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2015 ஜனவரி 07 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குள் அமைந்தள்ள கனகராஜன் குளம் மகா வித்தியாலய பாடசாலை ஆசிரியர்களுக்கு விடுதி அமைத்துத் தரும்படி வலயக் கல்வி அலுவலகம் மற்றும் மாகாணக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக வித்தியாலய அதிபர் தெரிவித்தார்

1 சி பாடசாலையாகவிருந்த இந்த பாடசாலை கடந்த 2014ஆம் ஆண்டு 1000 பாடசாலை திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு 1 ஏ.பீ பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இந்தப் பாடசாலையில் 37 வெளிமாவட்டங்களிலிருந்து அங்கு கடமையாற்றி வருகின்றனர்.

ஆசிரியர் விடுதியில்லாத காரணத்தால் ஆண் ஆசிரியர்கள் தங்கள் உடமைகளை பாடசாலையிலுள்ள அறையொன்றில் வைத்துவிட்டு, வகுப்பறைகளிலேயே தங்கி வருகின்றனர். பெண் ஆசிரியைகள் அருகிலுள்ள வீடுகளில் மாதாந்த வாடகை அடிப்படையில் தங்கி வருகின்றனர்.

முன்னர் அதிகஸ்ரப் பிரதேச பாடசாலையாக இருந்த போது, வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் 1 ஏ.பீ பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டும், ஏ – 9 வீதியில் இந்தப் பாடசாலை அமைந்திருப்பதால் அதிகஸ்ரப் பகுதி பாடசாலை என்ற நிலை மாற்றப்பட்டது. இதனால் ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டன.

ஆசிரியர்களை தங்க வைப்பதற்கு ஆசிரியர் விடுதி அவசியமாகவிருக்கின்றமையால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்து தரும்படி கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.

இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கருத்து கூறுகையில், 'இவ்வாறு பல பாடசாலைகள் தமக்கு வசதிகள் செய்து தரும்படி கோரிக்கைகள் முன்வைத்துள்ளன. நிதியுதவி; கிடைக்கும் போது, முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

நிதியுதவி கிடைக்கின்ற போது, மாவட்ட ரீதியில் சமமாக அவை பகிரப்பட்டு, அந்தந்த மாவட்டங்களிலுள்ள தேவைகள் தேவைப்படும் பாடசாலைகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .