2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சீரில்லாத பாதையில் பயணிக்கும் மாணவர்கள்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் முதல் அக்கராயன் மகா வித்தியாலயம் வரையான 2 கிலோமீற்றர் நீள வீதி குன்றும் குழியுமாக இருப்பதால் அக்கராயன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயலும் மாணவர்கள் பயணிக்க பெரும் சிரமப்படுகின்றன.

1 ஏ.பீ பாடசாலையான மேற்படி பாடசாலையில் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், ஆரோக்கியபுரம், அமதிபுரம், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், கண்ணகைபுரம், யூனியன்குளம், கோணாவில், அக்கராயன்கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 800 வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் இந்த வீதி, மழை காலங்களில் சேறும் சகதியாகவும், வெயில் காலங்களில் புழுதி படர்;ந்த  நிலையிலும் உள்ளது.

இந்த வீதியை புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்களும் பாடசாலை நிர்வாகமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும் இந்த வீதி இதுவரையில் திருத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .