2025 ஜூலை 23, புதன்கிழமை

வீதிக்கு நெருக்கமாக மரங்கள் இருப்பதால் ஆபத்து

Menaka Mookandi   / 2015 ஜனவரி 21 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராம வீதிகளுக்கருகில் காட்டு மரங்களும்,பற்றைகளும் வளர்ந்திருப்பதன் காரணமாக போக்குவரத்தின்; போது பெரும் சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

துணுக்காய், மாந்தைகிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கிராம வீதிகளுக்கருகில்  பாரிய மரங்களும் பற்றைகளும் உள்ளன. துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஐயன்கன்குளம், பழையமுருகண்டி, புத்துவெட்டுவான் ஆகிய இடங்களில் இது அதிகமாகக் காணப்படுகின்றது.

வீதிகளுக்கு அருகில் காடுகள் இருப்பதால் யானை நிற்பதை அவதானிக்க முடியாது, பொதுமக்கள் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயங்களும் காணப்படுகின்றன.

இது தொடர்பில் மேற்குறித்த பிரதேச செயலகங்களில் இடம்பெறும் அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் எடுத்துரைக்கப்பட்ட போதும், நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் உடனடியாக வீதிகளை புனரமைக்க முடியாத நிலை காணப்படுவதாக பிரதேச செயலர்கள் கூறினார்கள்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் முல்லைத்தீவு கிராம வீதிகளை புனரமைக்குமாறு பிரதேச செயலாளர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடமாகாண சபையிடமும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .