Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜனவரி 21 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், பரந்தன் முதல் அறிவியல்நகர் வரையான 31 கிராம அலுவலர் பகுதிகளை உள்ளடக்கிய 2 ஆயிரத்து 10 ஹெக்டேயர் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகராக்கல் பகுதியாக பிரகடனப்படுத்;தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரம் 1950ஆம் ஆண்டுகளில் எழுச்சி பெற்ற நகரமாகவும் மிகவும் பழமை வாய்ந்த நகரமாகவும் காணப்படுகின்றது.
இருந்தும், கிளிநொச்சியில் பேருந்து நிலையம், நூலகம், சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மையங்கள் எவையும் இல்லாத ஒரு நகரமாகவே உள்ளது. இதனால் நகருக்கு தினமும் வருகை தரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மக்கள் மீள்குடியேறியதில் இருந்து இன்று வரை பேருந்து நிலையம் இல்லை.
கிளிநொச்சி ஆயிரத்து 237 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கொண்டமைந்த ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் 40 ஆயிரத்து 843 குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 36 ஆயிரத்து 80 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வருடத்துக்கு 3533 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைப்பதுடன், 25 பாகை முதல் 30 பாகை வரையான வெப்பநிலையும் கொண்டதாக அமைந்துள்ளது.
வடமாகாணத்தின் போக்குவரத்து வீதிகளின் இணைப்பு மையமாகவும், விவசாய உற்பத்தி, கைத்தொழில், கல்விசார் மையமாகவும் கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.
இன்று வரை நவீன வசதிகளைக் கொண்ட நகரமாக கிளிநொச்சி உருவாக்;கப்படவில்லை என்ற கருத்து பல்வேறு தரப்பினரிடமும் இருந்து வருகின்றது.
கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் கூறுகையில்,
கிளிநொச்சி பரந்தன் முதல் அறிவியல் நகர் வரையான 31 கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 2,010 ஹெக்டேயர் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகராக்கல் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட 2,010 ஹெக்டேயர் பிரதேசம் பற்;றிய விழிப்புணர்வு கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படவில்லை.
ஏ - 9 வீதி அதிவேக மார்க்கத்துக்கான பாதையாக அமையும் போது, கிளிநொச்சி மைய நகரத்தில் இரு புதிய பாதைகள் அமையவுள்ளன. இது இலங்கையின் தேசிய திட்டமிடலில் உள்ளது.
முறிகண்டியில் ஆரம்பித்து அம்பாள்குளம், பொன்னகர், மலையாள்புரம் ஊடாக கனகபுரத்தில் இருந்து பரந்தனை இணைக்கின்ற, வெளிச்சுற்று வட்ட வீதி அமையவுள்ளது. இதற்கு புறம்பாக கரடிப்போக்கு சந்தியில் இருந்து ஆரம்பித்து, கணேசபுரம் திருநகர் ஊடாக உதயநகர் பாரதிபுரம் இணைக்கும் வகையில் இரணைமடு சந்தியை சென்றடையும் உள்வட்ட வீதியும் என பிரேரிக்;கப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சி நகர மையம், கிழக்கு நோக்;கி நகரும்.
நகரின் கைத்தொழில் வலயம், கல்வி வலயம் என்பன அறிவியல் நகர்பகுதியில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்;கலைகழகத்தின் விவசாயபீடம், பொறியியல் பீடம் என்பன அமைந்துள்ளன. கைதொழில் சார்ந்த 4 நிறுவனங்கள் தமது சேவையை ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றன.
பரந்தன் நகரை மையமாக கொண்டு கைத்தொழில் வலயம் அமையவுள்ளன. இதனைவிட குடியிருப்பு வலயம், விவசாய வலயம் என்பனவும் அமையவுள்ளன.
நகர்புறம் சார்ந்து 51.8 சதவீத நிலங்களில் இயற்கை சூழலியல்சார் தன்மையை பேணுவது உறுதி செய்யப்பட்டு, 1.6 சதவீத பகுதி நீர்ப்பகுதியாகவும் அமையவுள்ளது.
இது பற்றிய விழிப்புணர்வு கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago