2025 ஜூலை 23, புதன்கிழமை

மாவட்ட செயலகத்தின் அசமந்தப்போக்கே முரண்பாட்டுக்கு காரணம்: எஸ்.ஜூவாநந்தன்

George   / 2015 ஜனவரி 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா 

அரச தனியார் போக்குவரத்துசேவையின் நேர அட்டவணையை, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வழங்காத காரணத்தாலேயே இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கும் தனியார் பஸ் சங்கத்துக்கும் இடையில் பிரச்சினைகள், முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணம் என இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர் எஸ்.ஜூவாநந்தன், வியாழக்கிழமை (22) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். 


கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் வட்டக்கச்சியில் புதன்கிழமை (21) மாலை இடம்பெற்ற கைகலப்பு தொடர்பிலும், தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் கிளிநொச்சியில் நடைபெற்று வருவதற்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் தொடர்ந்து கூறுகையில், அரச, தனியார் போக்குவரத்துசேவையின்  நேர அட்டவணைகளை தயாரித்து வழங்குமாறு மாவட்டச் செயலகத்திடம் பலமுறை நாங்கள் கோரிக்கை முன்வைத்த போதும், அவர்கள் எங்களுக்கு அவற்றை வழங்கவில்லை.  


இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலகத்திடம் தற்போது கோரியுள்ளோம். புதன்கிழமை (21) இடம்பெற்ற சம்பவத்தில் ஊழியர் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .