2025 ஜூலை 23, புதன்கிழமை

முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் அமைக்க திட்ட முன்மொழிவு

George   / 2015 ஜனவரி 22 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 


கிளிநொச்சி தர்மபுரத்தில் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு சமூக சேவைகள் அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வே.தபேந்திரன், வியாழக்கிழமை (22) தெரிவித்தார். 


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முதியோர்களின் நன்மை கருதி முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.   


கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்துக்கு முன்னர் சகல வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் இயங்கி வந்தன. அவற்றில் உறவினர்களால் கைவிடப்பட்ட 270 முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். 
எனினும், யுத்தத்தால் அழிவடைந்த முதியோர் இல்லங்கள் மீண்டும் புனரமைக்கப்படவில்லை. 


முதியோர்களுக்கான பகல் பராமரிப்பு நிலையங்களில்; முதியவர்கள் தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும். இதனால், அவர்களுக்கான பகல் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவேண்டும் என பலரும் கோரிக்கை முன்வைத்தனர்.


இது தொடர்பாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரை தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 


கிளிநொச்சி தர்மபுரத்தில் இடமொன்றை தெரிவு செய்து, அதில் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் அமைத்துத் தரும்படி சமூக சேவைகள் அமைச்சைக் கோரியுள்ளோம். அதற்கான திட்ட முன்மொழிவும் அனுப்பியுள்ளோம். அமைச்சு அனுமதியளித்து நிதி அனுப்பினால், பகல் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .