2025 ஜூலை 23, புதன்கிழமை

கொள்கலன் பெட்டியில் சுகாதார நிலையம்

George   / 2015 ஜனவரி 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 


கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முக்கொம்பன் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை, கொள்கலன் பெட்டியிலேயே கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. 


இந்தக் கிராமத்தில் வசிக்கும் சுமார் 550 குடும்பங்களின் ஆரம்ப மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் நிலையமாக இது உள்ளது.  


இங்கு போதிய வசதிகள் இல்லாதமையால், மக்கள் ஆரம்ப வைத்திய தேவைகளுக்குக்கூட பூநகரிப் பிரதேச வைத்தியசாலை, அக்கராயன் மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு செல்லவேண்டியுள்ளது. 


இறுதி யுத்தம் நடைபெற்ற 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொண்டுவரப்பட்டு, கைவிடப்பட்டிருந்த கொள்கலன் பெட்டியில் தற்போது வைத்தியசாலை இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .