2025 ஜூலை 23, புதன்கிழமை

பளைப் பொலிஸாருக்கு, நீதவான் எச்சரிக்கை

George   / 2015 ஜனவரி 22 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 
தவறான முறையில் வழக்கொன்றைப் பதிவு செய்து, ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைத்தமைக்கு பளைப் பொலிஸாரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன், புதன்கிழமை (21) எச்சரிக்கை செய்தார். 


பளைப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், தனது மற்றும் தனது உறவினர் காணிகளிலுள்ள பனை மரங்கள் பத்தினை வெட்டுவதற்கான அனுமதியை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பெற்று, மரங்களை தறித்து, தனது வீட்டு வளவில் வைத்துள்ளார்.


இந்த நிலையில், பனை மரங்கள் வைத்திருப்பதற்கான அனுமதியை வைத்திருக்கவில்லையெனக் கூறிய பளை பொலிஸார், தறிக்கப்பட்ட பனை மரங்களை கைப்பற்றியதுடன், தறித்து வைத்திருந்தவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். 


குறித்த வழக்கு, புதன்கிழமை(21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தறிந்து வைத்திருந்தவர் தனது பக்க நியாயத்தை சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் கூறினார். 


பனை மரங்கள் தறிப்பதற்கான அனுமதியுடன் வைத்திருப்பதற்கான அனுமதியும் உண்டு என்பதை ஏற்றுக்கொண்ட நீதவான், அவ்வாறு அனுமதியில்லையென்பது எந்தச் சட்டத்தில் உள்ளது என்றும், அதனை காண்பிக்குமாறும் பளைப் பொலிஸாரிடம் கோபமாக வினாவினார். 


இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யக்கூடாது என உத்தரவிட்ட நீதவான், பனை மரங்களை உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டதுடன், வழக்கை தள்ளுபடி செய்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .