Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜனவரி 23 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையை சேர்ந்த ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) காலையில் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்போ சந்தியில் இடம்பெற்ற இந்த கைகலப்பையடுத்து, அங்கு மேலதிக பொலிஸார் அனுப்பப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இரண்டு தரப்பிலிருந்து சில பிரதிநிதிகளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இராமநாதபுரத்தை நோக்கிச் சென்ற கிளிநொச்சி சாலை பஸ் மீது இராமநாதபுரம் பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (23) காலை 9.30 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் கிளிநொச்சி சாலையை சேர்ந்தவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். இந்த கல்வீச்சுத் தாக்குதல் சம்பவத்தையடுத்தே கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வட்டக்கச்சி பகுதியில் கடந்த புதன்கிழமையும் (21) இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு, இருதரப்பிலும் தலா ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அரச, தனியார் போக்குவரத்து சேவையின் நேர அட்டவணை தொடர்பிலான பிரச்சினையே இந்த கைகலப்புக்கு காரணமாகும்.
46 minute ago
55 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
55 minute ago
56 minute ago
1 hours ago