2025 ஜூலை 23, புதன்கிழமை

திங்களன்று முதல் இறால் பிடிக்கலாம்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 23 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கிளிநொச்சி தொடுவாய்ப்பகுதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் இறால் பிடிக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் வெள்ளிக்கிழமை (23) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'இறால்களின் வளர்ச்சிக்காக கடந்த 45 நாட்கள் இறால் பிடிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் இறால் பிடிக்கலாம். இவ்வாறு வளர்ச்சி அடைந்த இறால்களை பிடிப்பதன் மூலம் மீனவர்கள் நன்மை அடைவார்கள்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதே அப்பகுதிக்குள் இறால் குஞ்சுகள் வந்து ஒதுங்கும். பின்னர் அவை வளர்வதற்காக 45 நாட்களுக்கு இறால் பிடிப்பது தடை செய்யப்படுகிறது. இவற்றில் 3 வகையான இறால்கள் வளரும்.

அண்மையில் அதிக மழை கிடைத்துள்ளதால் இம்முறை மீனவர்கள் அதிக இலாபத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக' அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .