Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஜனவரி 24 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கடந்து போன ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதிராக, தமிழ் பிரதேசங்களில் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் நாம் அரசியல் ரீதியாக நசுக்கப்பட்டு இருந்ருந்தோம். இதை புரிந்துக் கொண்டு ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தமை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பலத்தையே காட்டி நிற்கின்றது என மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபையின் இவ்வருடத்துக்கான முதல் கூட்டம், வியாழக்கிழமை (22) இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த ஜனநாயகமற்ற ஆட்சியில், அடக்கு முறையில் வாழ்ந்த நாம் மீண்டும் அதே வழியில் செல்லாது எமது மாவட்டத்தின் அபிவிருத்தியில் பங்கெடுப்பது அவசியம். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பாக பொறுப்பான அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை, நகர சபை அதிகாரிகள் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இன்றி செயற்படுவதுக்கு வழிவகுக்க வேண்டும்.
கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளாக இருப்பவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த மாகாண சபை தேர்தலுக்குப் பின் கூட்டப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கூட்டத்தை கூட்டி அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாட வேண்டும்.
மேலும், தமது சொந்த தேவைகளுக்காக அரசாங்க திணைக்களங்கள் மற்றும் கட்டடங்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அமைச்சு, அந்த அமைச்சுக்கு பொருப்பான விடையங்களில் மாத்திரம் தலையிட வேண்டும்.
கடந்த ஆட்சியின் போது, அடாவடித்தனமாக செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, அதே வழியில் செயற்பட நாம் சந்தர்ப்பங்களை வழங்க கூடாது.
மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் எமக்கும் பங்குண்டு என்பதனை அறிந்துக் கொண்ட மக்களாக செயற்பட்டு, புதிய அரசாங்கத்தோடு இணைந்து நாம் அரசியல் ரீதியாக நிரந்தர தீர்வுக்காக சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
44 minute ago
53 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
54 minute ago
1 hours ago