2025 ஜூலை 23, புதன்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 ஜனவரி 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், நா.நவரத்தினராசா


மன்னார் முருங்கன் மற்றும் மாவிலங்கேணி பாடசாலைகளுக்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து, ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களை வெள்ளிக்கிழமை (24) கையளித்தனர்.


வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின்  பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து, மடிக்கணினி, மல்ட்டி மீடியா கருவி மற்றும் அதற்கான திரை ஆகியவை வழங்கி வைக்கப்பட்டன.


முருங்கன் மகாவித்தியாலம் மற்றும் மாவிலங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைகளின் அதிபர்களிடம் அனைத்து உபகரணங்களும் உத்தியோகபூர்வமான வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை, மன்னார் பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்துக்கு தனது பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் நிதியினை பாடசாலை அதிபர் அருட் சகோதரர் ஸ்டானிஸிடம் கையளித்தார். 


இதன்போது, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .