2025 ஜூலை 23, புதன்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Thipaan   / 2015 ஜனவரி 25 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பொலிஸ் நிலைய வீதியில் டெலிகொம் நிறுவனத்துக்கு முன்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதினால் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் மூன்றுபேர் பயணித்துள்ளதாகவும் அவர்கள் மது போதையில் வேகமாக பயணித்ததால் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், முச்சக்கர வண்டி சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு முச்சக்கர வண்டியும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிலில் இருந்து ஒரு தொகை டின் பியர் வீதியல் வீழ்ந்து கிடந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மன்னார் பொலிஸார், காயமடைந்த நான்கு பேரையும் மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிலிள் பயணித்த மூன்று பேரூம் மது போதையில் உள்ளதாகவும் அவர்களில் ஒருவருக்கு கால் எலும்பு முறிவடைந்துள்ளதாகவும் ஏனைய இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .