Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Gavitha / 2015 மார்ச் 28 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா நகர்ப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் வாகனங்களிடம் நகரசபையின் துணையுடன் தனியார் பணம் அறவிடும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
வவுனியா நகர்ப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்யவருவோர் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல வருகை தரும் வாகனங்கள் உட்பட வீதியோரம் சில நிமிடங்கள் தரித்து நிற்கும் வாகனங்களுக்கும் 30 ரூபாய் வீதம் அறவிடப்பட்டு வருகின்றது.
வாகன தரிப்பிட குத்தகையாளர் என்ற தனிப்பட்ட பெயர் பொறிக்கப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், வாகன உரிமையாளர்கள் பலரும் பல்வேறு இடையூறுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை முச்சக்கவண்டிகளை வாடகைக்கு அமர்த்தி வரும்போது 80 ரூபாய் வாடகையாக பெறவேண்டிய நிலையில் 30 ரூபாயை இக்குத்தகையாளருக்கும் வழங்க வேண்டியுள்ளதாகவும் முச்சக்கவண்டி உரிமையாளாகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அரசாங்கத்துக்கு வருடாந்தம் வரி செலுத்துக்கின்ற போதிலும் தினமும் இவ்வாறு தரிப்பிடமே இன்றி வாகன தரிப்பிட குத்தகையாளர் என்ற போர்வையில் நகரசபை மக்களிடம் பணத்தை பெற்று வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் க. சத்தியசீலனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
குத்தகைக்காரர்கள் அவ்வாறு பணத்தை வசூலிப்பதற்கு அனுமதி இல்லை. அவர்கள் வர்த்தக நிலையத்திலோ அல்லது வீதியில் பல மணி நேரம் வாகனத்தை நிறுத்தி வைத்து வயாபாரம் செய்வாராக இருந்தால் அவர்களிடம் பணத்தை அறவிடலாம்.
பாடசாலைகளிலிருந்து மாணவர்களை ஏற்றவருபவர்களிடமோ அல்லது பொருட்களை கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களுக்கு வருபவர்களிடமோ பணத்தை அறவீடு செய்யமுடியாது. அவ்வாறு பணம் கோரும் போது பணத்தை வழங்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் குறிப்பிட்ட குத்தகையாளர் வாகன தரிப்பிடத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், வெளிப்படையான கேள்வி கோரல் மூலமே இக்குத்தகைக்காரருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பாக வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ். சந்திரகுமாருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இவ்வாறு பணம் அறவிடப்படுவது தொடர்பாக எமக்கும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் செயலாளர் எவ்வாறு இதனை வழங்கியுள்ளார் என தெரியாது. எவ்வாறு இருப்பினும் இவ்வாறான செயற்பாடு தினமும் வருமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பே. இது தொடர்பில் நகரசபையே தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
55 minute ago
2 hours ago