2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு ரி.ஐ.டி அழைப்பு

Kanagaraj   / 2015 மார்ச் 28 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி. தேவராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவு( ரி.ஐ.டி) விசாரணைக்காக அழைத்துள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி மத்தியில் அமைந்துள்ள தனது பத்திரிகை விற்பனை நிலையத்துக்கு கடந்த 26ஆம் திகதி, காலை 9.00 மணிக்கு  வருகை தந்த நெடுங்கேணி பொலிஸார் இந்த அறிவிப்பு கடிதத்தை தந்துள்ளனர். 

இக்கடிதத்தில் இப் பிரதேசத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி 10 மணிக்கு கொழும்பில் உள்ள புதிய அரசாங்க அதிபர் கட்டடத்தில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் இரண்டாம் தள அதிகாரியை சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கடந்த வருடம் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவிருந்த நிலையில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது (08.10.2014) அன்று இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .