2025 ஜூலை 10, வியாழக்கிழமை

த.தே.கூ. எதிர்க்கட்சியாக வரும் சந்தர்ப்பம் ஏற்படின், நாம் ஆதரவு வழங்குவோம்: இராதாகிருஸ்ணன்

Sudharshini   / 2015 மார்ச் 29 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியாக  வருமானால், நிச்சயமாக உங்களோடு நாங்கள் இருப்போம். அதற்கு எந்தவிதமான பின்வாங்கலையும் நாம் செய்யமாட்டோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியா பூவரசன்குளம் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (28) தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

தேசிய அரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் பங்குதாரர்களாக உள்ளன. அதில் சிறுபான்மை கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தேசிய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளாது என பேரினவாதிகள் பரவலா கூறுகின்றார்கள். இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நாங்கள் ஒரு காலமும் வர முடியாது. ஜனாதிபதியாக வரமுடியாது. ஏன் எதிர்க்கட்சி தலைவராக வரகூடாது. அந்த அளவுக்கு நாங்கள் தகுதி இல்லாதவர்களா?

சிறுபான்மை மக்களுக்கு இன்று பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அவற்றுக்கொல்லாம் தீர்வுக்காண, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள். இது வரவேற்கப்படவேண்டிய விடயம்.

வட பகுதியில் நிலவிய பல்வேறு அதிகார பிரச்சனைகள் இன்று தீர்க்கப்பட்டுள்ளன. கடிவாளம் அகற்றப்பட்டு சுதந்திரமாக வேலை செய்ய கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்தையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், சிறுக சிறுக பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்து. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில்; பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .