2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இரணைதீவில் தங்கி தொழில்செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இரணைதீவில் தங்கி நின்று கடற்தொழில் செய்வதற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என மீனவ சங்க பிரதிநிதி ஒருவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பாகவும், பெண் தலைமைத்துவ குடும்ப தலைவிகள், மீனவ சங்கங்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் ஆகியோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) சந்தித்துக் கலந்துரையாடும்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்த மீனவ சங்கப் பிரதிநிதி, 'யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் ஆகின்ற போதிலும் இரணைதீவில் இரவில் தங்கிநின்று தொழில் செய்வதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் இரணைமாதா பகுதியைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் மன்னார் பகுதி மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

இரணைதீவில் வாடி அமைத்து தங்கி நின்று தொழில் செய்ய அனுமதி பெற்று தரவேண்டும். இரணைதீவில் தான் கடற்பாசி மற்றும் கடல் அட்டை வளர்க்க முடியும். அதற்காக எமது சங்கங்கள் கூடாக பல தடவைகள் அனுமதி கேட்டு இருந்தோம். அதற்கு கடற்படை அனுமதி அளிக்கவில்லை. அதற்கான அனுமதியையும் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என அந்த பிரதிநிதி மேலும் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .