2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மரமுந்திரிகை பண்ணையை சிவில் அமைப்பிடம் கையளிக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கிளிநொச்சி, ஜெயபுரத்தில் 400 ஏக்கர் காணியில் அமைந்துள்ள மரமுந்திரிகைப் பண்ணையை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று சிவில் அமைப்பிடம் கையளிக்க வேண்டும் என சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

மீள்குடியேற்றம் தொடர்பாகவும், பெண் தலைமைத்துவ குடும்ப தலைவிகள், மீனவ சங்கங்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் ஆகியோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) சந்தித்துக் கலந்துரையாடும்போதே, சிவில் அமைப்பின் பிரதிநிதி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அப்பிரதிநிதி, 'பூநகரி ஏ -  32 வீதியிலுள்ள ஜெயபுரத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினர் மரமுந்திரிகை பண்ணையை நிர்வகிக்கின்றனர். அந்த பண்ணையில் இராணுவத்தினரே வேலை செய்கின்றார்கள். அந்த பண்ணையை சிவில் சமூகத்திடம் கையளித்தால் ஜெயபுரத்திலுள்ள பல மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என்றார்.

அதற்கு பதில் அளித்த பிரதமர், 'இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டத்தை சிவில் சமூகத்திடம் கையளிக்க வேண்டுமாயின் சிவில் சமூகம் பலமாக இருக்க வேண்டும். முதலில் சிவில் சமூக பிரதிநிதியை பலப்படுத்த வேண்டும். அடுத்து கிராமத்தை பலப்படுத்த வேண்டும். அதன் பின்னரே சிவில் சமூகம் பலப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .