2025 ஜூலை 10, வியாழக்கிழமை

குழாய்க் கிணற்றிலிருந்து சேற்று நீர்

Princiya Dixci   / 2015 மார்ச் 31 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் கிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் அமைக்கப்பட்ட குழாய் கிணற்றிலிருந்து குடிநீருக்குப் பதிலாக சேற்று நீர் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கல்லாறு கிராமத்தில் வசித்துவரும் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக பிரதேச ரீதியாக குழாய் கிணறுகள், பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டன.

அவ்வாறு அமைக்கப்பட்ட குழாய்க் கிணறுகளில் இருந்து குடிநீருக்குப் பதிலாக சேற்று நீர் வருகின்றது. பொதுக்கிணறுகள் உவர்நீர்த்தன்மையுடையவையாகக் காணப்படுகின்றன.

இதனால், இங்குள்ள குடும்பங்கள், ஐந்து கிலோ மீற்றர் தூரம் சென்று தமக்கான குடிநீரைப்பெற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 123 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நீர்த்தாங்கிகளில் சேமிக்கப்பட்ட நீரை ஒரு மாத காலத்துக்கு மாத்திரம் பாவிக்க முடிகின்றது. இந்தக் கிராம மக்கள் குடிநீரை 200 லீற்றர் 250 ரூபாய் என்ற ரீதியில் தனியார் ஒருவரிடம் கொள்முதல் செய்து பாவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .