Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
George / 2015 மார்ச் 31 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியிலுள்ள கிராமங்களில் இடம்பெறும் குடும்ப வன்முறைக்கு சட்டவிரோத மதுபான உற்பத்தியே காரணம் என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதியொருவர், செவ்வாய்க்கிழமை(31) தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்கு கிராமங்களில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் சட்டவிரோத கசிப்பே காரணம்.
பின்தங்கிய கிராமங்களில் இதன் உற்பத்தியானது அதிகரித்துள்ளதுடன், நுகர்வோரும் அந்தப் பிரதேசங்களிலேயே இருக்கின்றனர். இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
பெண்கள் தமக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் தமது உள்ளார்ந்த விடயங்களை மனம் திறந்து கூறுவதற்கு பொலிஸ் நிலையங்களில் போதியளவு பெண் பொலிஸார் இல்லை.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம். வடக்கிலுள்ள பெண்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் தலைமையில் ஒரு குழுவொன்றை அமைத்துத் தருவதாகவும் அந்தக்குழுவுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறும் பிரதமர் கூறியிருந்தாக அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago