2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் 8 பேருக்கு 9ஏ

Thipaan   / 2015 மார்ச் 31 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

க.பொ.த (சா.த.) பரீட்சை பெறுபேறுகளின் படி, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 8 மாணவிகள் 9 பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.

வவுனியாவின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான இக்கல்லூரியில் இருந்து கம்சனா மகேந்திரன், இலக்கியா கேதீஸ்வரன், கேதிகா சண்முகானந்தன், திவியா திருநாவுக்கரசு, தபோசினி சூரியச்செல்வன், நிலாணி சிவராஜா, நிதுர்சா வதனகுமார், தனுராகவி தாமோதரபிரசாத் (ஆங்கில மொழிமூலம்) ஆகியோர் அதி விசேட சித்திகளை பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஆங்கல மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றியோர் உட்பட 22 மாணவிகள் 8 பாடங்களில் அதி விசேட சித்திகளையும் ஒரு பாடத்தில் பி சித்தியையும் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .