Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 31 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா நகர்ப் பகுதியில் அதிகரித்துவரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அப்பகுதியிலுள்ள வீதியோர வியாபாரங்களை அகற்றுவதற்கு வவுனியா நகரசபை இன்று செவ்வாய்க்கிழமை (31) முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல பிரதேசங்களில் இருந்தும் வருபவர்கள் வவுனியா நகரப்பகுதியில் உணவுப்பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் வீதியோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றமையினால் அண்மைக்காலமாக அப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதுடன் மக்களின் நடமாட்டத்துக்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுத்த வவுனியா நகரசபை, வீதியோர வியாபாரிகளைத் தொடர்புகொண்டு, வியாபாரத்துக்கான இடங்களைப் பெறுமாறும் வீதியோரத்தில் வியாபாரம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே, வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக, நேற்று முதல் நகரசபை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
53 minute ago
2 hours ago