Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
George / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், செல்வநாயகம் கபிலன்
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 102 கிலோகிராம் எடையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பாரியளவான கஞ்சா தொகையானது, வவுனியா விசேட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(31) கைப்பற்றப்பட்டதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை(31) மாலை கிளாலியிலுள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு, கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா, சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியானது என பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ansam Thursday, 02 April 2015 09:30 AM
இந்த கஞ்சா அளிக்கப்படுமா அல்லது பொலிசாரினால் வியாபாரம் செய்யப்படுமா?
Reply : 0 0
ansam Thursday, 02 April 2015 09:30 AM
இந்த கஞ்சா அளிக்கப்படுமா அல்லது பொலிசாரினால் வியாபாரம் செய்யப்படுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago