Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழ் இந்த வருடம் 11 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (01) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்டச் செயலாளர் மேலும் கூறியதாவது,
'முன்னர் 9,500 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை செய்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. குளத்தின் நீர் மட்டம் உயர்வாகக் காணப்படுவதால் மேலதிகமாக 1,500 ஏக்கர் நிலத்தில் செய்கை பண்ணப்படவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், இப்பகுதியில் செய்கை பண்ண அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பிலேயே விவசாயிகள் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும். மேலதிகமான நிலப்பரப்பில் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளின் சிறுபோக செய்கை உரிமம் இரத்துச் செய்யப்படும்.
திட்டமிடப்பட்ட அளவில் செய்கையை மேற்கொள்ளும் போது, குளத்தின் நீரை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து நல்ல விளைச்சலைப் பெறமுடியும். திட்டமிடாத மேலதிக செய்கைகளுக்கு நீரை வழங்க முடியாது என்பதால் அந்த விளைச்சல்கள் பாதிக்கப்படும்.
மேலதிகமாக செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் செய்தது போல கருணையின் அடிப்படையில் நீர் வழங்கப்படமாட்டாது. மேலதிக செய்கையாளர்களுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான அறிவித்தல், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற சிறுபோகச் செய்கையாளர்களுக்கான கூட்டத்தில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக' மாவட்;டச் செயலாளர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago