2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நடுக்குடா விபத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பேசாலை, நடுக்குடா பகுதியில் நேற்று (1) புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில்  பேசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் குறித்த முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்த போது, பேசாலை நடுக்குடா பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சகர வண்டியில் பயணித்த திரேசம்மா (வயது 80) என்ற வயோதிப தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றவர் சிறு காயங்களுடன் பேசாலை வைத்தியசாலையிலும் அவரது மனைவி காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .