2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வவுனிக்குளத்தின் கீழ் சிறுபோகம் செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டு இரண்டாயிரத்து 348 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது என வவுனிக்குள விவசாய திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாக காணப்படும் வவுனிக்குளத்தின் கீழ் உள்ள நீரின் அளவைக் கொண்டு 2 ஆயிரத்து 348 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது குளத்தின் நீர் மட்டம் 21 அடியாகவுள்ளதுடன் மத்திய துருசு நீர்ப்பாசன வாய்க்காலில் 68 ஏக்;கரும் இடது கரை வாய்க்காலில் ஆயிரத்து 210 ஏக்கரும் வலது கரை வாய்க்காலில் 925 ஏக்கரும் என இரண்டாயிரத்து 203 ஏக்கரிலும் பொதுப்பங்குகளாக 145 ஏக்கரும் என இரண்டாயிரத்து 348 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விதைப்பு திகதி ஏப்ரல் மாதம் 10ஆம்; திகதி எனவும் நீர் விநியோக கடைசித் திகதி ஓகஸ்ட் 10ஆம் திகதி எனவும் நீர்;ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனிக்குளத்தின் கீழ் காலபோகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோகத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .