2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையான இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும்  இடையில் நேற்று வியாழக்கிழமை (2) மாலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணத்தின் மீனவர் சமாசங்களின் தலைவர்கள் மற்றும் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விசேட ஒன்றுகூடலில், எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளால் தினந்தோறும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அத்தோடு எமது மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் எமது கடல் வளம் நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதை தடுக்கும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரால் விசேட மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .