2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மாந்தை மேற்கில் காட்டு யானைகள் தொல்லை

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு உட்பட பல கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் மீள்குடியேறியுள்ள நிலையில், குறித்த பகுதிகளில் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கை மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு உட்பட சில கிராமங்களுக்குள் செல்லும் காட்டு யானைகள் விவசாய செய்கையினை சேதப்படுத்துவதோடு வீடுகளில் உள்ள தென்னை, வாழை போன்ற மரங்களையும் தொடர்ச்சியாக நாசப்படுத்துவதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வயது முதிர்ந்த சில யானைகலே மக்களின் குடியிறுப்பு பகுதிக்குள் வந்து அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்றகொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .