2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மன்னகுளம் சிறுமியின் சடலம் தோண்டியெடுப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மன்னகுளத்தில் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த செ.சரண்யா (வயது 16) என்ற சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை (06) சட்ட வைத்திய பரிசோதனைக்காக மன்னகுளம் மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி வவுனியா மன்னகுளத்தில் வசித்து வந்த செ. சரண்யா என்ற சிறுமி நோய்வாய்ப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து, சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மார்ச் மாதம் 6ஆம் திகதி சடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டடிருந்தது.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி மன்னகுளம் மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்துக்கு, நீதிமன்ற உத்தரவுக்கமைய  பொலிஸாரினால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

ஒரு மாதமும் 8 நாட்களும் கடந்த நிலையில் வவுனியா மாவட்ட நீதவான் முஹமட் ரிஸ்வான் மற்றும் யாழ். மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் ருத்திரபதி மயூரதன், கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மதியம் 2.30 மணியளவில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதனையடுத்து உறவினர்களிடம் சடலம் அடையாளம் காண்பதற்காக பார்வையிடப்பட்டதன் பின்னர், கனகராயன்குளம் பொலிஸாரால் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .