Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் திங்கட்கிழமை(6) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.
வீட்டுக்கு வீடு-கிராமத்துக்கு கிராமம் 15 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள ஒவ்வொறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராம அபிவிருத்தித்திட்டத்துக்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சின் பணிப்பாளர் முஹமட் வஹாப்தீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், முத்தலிப்பாபா பாரூக், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிறாய்வா, என்.குணசீலன், அயூப் அஸ்மி பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஒதுக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago