Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் எழுத்தூர் செம்மண் வீதி பகுதியில் உள்ள பற்றையினுள் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ கிராம் நிறை கொண்ட கஞ்சா பொதியை நேற்று வியாழக்கிழமை (23) இரவு மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எழுத்தூர் செம்மண் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்ததோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை அவ்வீதியில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைத்து வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இந்த நிலையில், சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அவசர பொலிஸ் பிரிவிற்கு உடனடியாக தகவல் வழங்கிய நிலையில் இரவு 9 மணியளவில் அவ்விடத்துக்கு வந்த மன்னார் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிலை மீட்டு சோதனையிட்டு பார்த்துள்ளனர்.
இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் இருக்கைக்கு கீழ் சுமார் 5 கிலோ கொண்ட கஞ்சாப்பொதி காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கஞ்சப்பொதியினையும்,மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கையில்,
மன்னார் சௌத்பார் பகுதியைச் சேர்ந்த இருவரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள். ஆனால், மோட்டார் சைக்கிள் மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த பிரிதொரு நபருடையது.
கோயிலுக்குச் செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு கஞ்சாவை வைத்து கொண்டு சென்றுள்ளனர்.
இதன் போதே அப்பகுதியில் பொலிஸாரை கண்டு ஓடியுள்ளனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago