2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நந்திக்கடல் சேற்றை அகற்றித்தருமாறு கோரிக்கை

Thipaan   / 2015 மே 12 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, வட்டுவாகல் நந்திக்கடல் ஆற்றின் சேற்றை அகற்றி அதனை ஆழமாக்கித் தருமாறு நந்திக் கடலில் கடற்றொழில் செய்யும் கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரமே நந்திக்கடலாகும். வட்டுவாகல் மற்றும் நாயாறு பகுதிகளில் சிறப்பான தொழில் இடம்பெறுமானால் முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரம் உயரும்.

கடந்த காலங்களில் இந்த ஆறுகளிலிருந்து பிடிக்கப்படும் இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

தற்போது வட்டுவாகல் ஆற்றில் சேறு நிரம்பிக் காணப்படுவதன் காரணமாக இறால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் நந்திக்கடல் ஆற்றை ஆழமாக்குவதன் மூலம் தாங்கள் நன்மையடைய முடியும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .