2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சமாசத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் செய்யவுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சங்கங்களுடன் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் அதிகரித்துள்ள சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நீரியல் வளத்துறைத் திணைக்களம் போதிய நடவடிக்கைகளை எடுக்காமையையும் கண்டித்தும் இந்த போராட்டம் செய்யப்படவுள்ளது.

சட்டவிரோத மீன்பிடியால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு நீரியல் வளத்துறையினரிடம் அதிகாரங்கள் இருந்தும் அவர்கள் அதனை முழுமையாகச் செய்யவில்லை.

இதனால், முல்லைத்தீவில் கடலட்டை பிடிப்பு, வெளிச்சம் பாய்;ச்சி பிடித்தல், குழை போட்டு கணவாய் பிடித்தல் ஆகிய செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

அத்துடன், வெளிமாவட்ட மீனவர்களில் அத்துமீறல்களும் முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியில் அதிகரித்துள்ளது. இதனையும் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .