2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிறீஸுக்கு செல்லும் மாணவனுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஏற்பாட்டில் கிறீஸில் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள 55 ஆவது சர்வதேச ஒலிம்பிக் செயலமர்வில் கலந்து கொள்ளவதற்காக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மரியான் அன்ரனிஸ் என்ற மாணவன் இலங்கையின் சார்பாக கிறீஸிற்கு பயணமாகவுள்ளார்.

குறித்த மாணவனை கௌரவப்படுத்தி  உதவிடும் வகையில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் முதற்கட்டமாக ஒரு தொகுதி நிதி உதவி  வெள்ளிக்கிழமை மாலை மன்னார் அலுவலகத்தில் வைத்து, மாவட்ட இணைப்பாளர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்திய சோதி ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

மன்னார் சிறிய குருமட வீதியைச் சேர்ந்த மரியான் அன்ரனிஸ் என்ற மாணவன் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று, பல்கலைக்கழக அனுமதி பெற்று யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவன் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 55 ஆவது சர்வதேச ஒலிம்பிக் செயலமர்வுக்கு   இலங்கையில் இருந்து செல்லும் ஒரே ஒரு தமிழனாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .