2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் இரண்டு குளங்கள் வான் பாய்கின்றன

George   / 2015 மே 17 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

தற்போது பெய்துவரும் மழைக்காரணமாக முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரு குளங்கள் வான் பாய்கின்றன.

புத்துவெட்டுவானின் மருதங்குளம், மற்றும் பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களும் வான் பாய்கின்றன.

மருதங்குளத்தின் வான் பாய்வதன் காரணமாக கிளிநொச்சியின் இரண்டாவது பெரியகுளமான அக்கராயன்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.

பழைய முறிகண்டிக்குளம் வான் பாய்வதன் காரணமாக துணுக்காயின் அம்பலப்பெருமாள் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் வான்பாய்வதற்கான நீர்மட்டத்தினையடைந்து கொண்டிருக்கின்றது.

மழை தொடர்ந்து பெய்வதன் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல குளங்கள் வான்பாய்வதற்கான நீர்மட்டத்தினையடைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .