2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மின்சார இணைப்பு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Thipaan   / 2015 மே 18 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி மேற்கு கிராமத்தில் மின்சாரமற்ற வீதிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முல்லைத்தீவு  மாவட்ட அமைப்பாளர் ஜமால்தீன் றிசாம், நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த திட்டத்தின் கீழ் மின்சாரமற்ற கிராமங்களுக்கு அவசரமாக மின் இணைப்பை வழங்கும் நோக்குடன் எனது வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் சிபாரிசின் பேரில் குறித்த கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

இதன்படி முதற்கட்டமாக நீராவிப்பிட்டி மேற்கு கிராமத்தல் மின்சாரமற்ற பகுதிகளுக்கும் , அடுத்ததாக குமாரபுரம் கிராமத்திலுள்ள ஏழு வீதிகளுக்கும், உடுப்புக்குளம் பிரதேசத்திற்கும் மின் இணைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .