Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மே 19 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடலில் நடைபெறும் சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்தக்கோரி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் முன்பாக செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீன்வளம் அழிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
முல்லைத்தீவில் கோப்பாரப்பிட்டி தொடக்கம் நல்லதண்ணி தொடுவாய் வரையிலுள்ள 74 கிலோமீற்றர் கடலில் 3600 கடற்றொழிலாளர்கள் மீன்பிடி தொழில்; செய்கின்றனர். சட்டவிரோத மீன்பிடி, வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல், கடலட்டை பிடித்தல், சங்கு பிடித்தல், டைனமேற் பாவித்து மீன்பிடித்தல் ஆகியவற்றால் இந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
முல்லைத்தீவில் 3 நன்னீர் மீன்பிடிச் சங்கம் உட்பட 26 மீன்பிடிச் சங்கங்கள் உள்ளன. மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டு 6,000 பேர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறவும், தொழில் பாதிக்கப்படாமல் இருக்கவும், சட்டவிரோத மீன்பிடியை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் ஏற்கனவே மாவட்டச் செயலாளருக்கும் நீரியல் வளத்துறையினருக்கும் மகஜர்கள் கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago