2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'புதிய முதலீடுகளை செய்ய சுவிஸ் தயாராகவுள்ளது'

Thipaan   / 2015 மே 20 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும் அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாகவும் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெனிஸ் வோர்கர் நெவில் கூன், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவிஸ் நாட்டின் உயர் மட்ட குழுவினருக்கும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (19) இடம்பெற்ற வர்த்தக மேம்பாடு தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இதனை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இலங்கை அரசும் சுவிட்ஸர்லாந்து அரசும் செய்துள்ள இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை சம்பந்தமாக தூதுக்குழுவுக்கு விளக்கமளித்தார்.

சுவிட்ஸர்லாந்து அரசு, இலங்கையில் முதலீடுகளை செய்வது எமது நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ரிஷாத் இதன்போது குறிப்பிட்டார்.

அதேவேளை, இரு தரப்பு உடன்படிக்கை தொடர்பிலும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .