2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் பெண் சிசு மீட்பு

Princiya Dixci   / 2015 மே 21 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி புகையிரத நிலைய வீதிக்கு அருகிலுள்ள ஒற்றையடிப் பாதையில் இருந்து பிறந்து 24 மணித்தியாலங்களேயான பெண் சிசு, புதன்கிழமை (20)  மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் ஒருவன் ஒற்றையடிப் பாதையில் பெண் சிசு கிடப்பதை அவதானித்து, அதனை மீட்டு தனது மேற்சட்டையை அந்த சிசுவுக்கு அணிவித்து அதனை பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளான்.

சிசுவைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், சிசுவை கண்டெடுத்த இடத்தை சிறுவனைக் கொண்டு அடையாளப்படுத்தினர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் சிசு தற்போது ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணையை மேற்கொண்டு, சிசுவை கைவிட்ட தாயைத் தேடி வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .