2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் பதற்றம்

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பஸ் தரிப்பிட பகுதியில் குழுமியிருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று (21) வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா வர்த்தகர்கள் சங்கத்தினால் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் வங்கிகள், பாடசாலைகள் என்பனவும் இயங்காதுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் தனியார் பஸ் சேவைகள் மற்றும் முச்சக்கரவண்டி சேவைகள் உட்பட போக்குவரத்து வசதிகளும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

வவுனியா தபால் நிலைய ஊழியர்கள், நகரசபை மாவட்ட செயலக ஊழியர்கள், விவசாய கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இளைஞர்கள் சிலரால் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டதுடன் வீதி தடைகளும் இடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .