Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 23 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையினை கண்டித்தும் மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வு மன்னார் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இன்று சனிக்கிழமை (23) காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தின் செயலாளர் ஏ.நசூருதீன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, உயிரிழந்த மாணவி வித்தியாவுக்கு மன்னார் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த மாணவி துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதோடு, குற்றவாளிகளுக்;கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க உறுப்பினர்கள், மன்னார் தனியார் பஸ் சங்க உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முக்கியஸ்தர் ஜஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago