2025 ஜூலை 05, சனிக்கிழமை

தீ விபத்தில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்,  எமிழ் நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட  ஜிம்றோன் நகர் கிராமத்திலுள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ பரவியதால்,  எரிகாயங்களுக்குள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த  தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளும்  எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில்  15 வயதுடைய அஜித் என்ற சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை காலை மாற்றப்பட்டுள்ளான்.

இந்த வீட்டில்  தாய் மற்றும்  நான்கு பிள்ளைகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். இதன்போது, வீட்டில் திடீர் என்று  தீ  பரவியதுடன்,  வீட்டின் கூரை சீட் பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உறக்கத்திலிருந்தவர்கள் எழுந்து கூக்குரலிட அயலவர்கள் விரைந்துசென்று  இவர்களை காப்பாற்றியதுடன், எரிகாயங்களுக்குள்ளான மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.  

இதன்போது,      வீட்டிலிருந்த  இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட உடைமைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

சம்பவ இடத்துக்கு வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உள்ளிட்டோர் சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .