2025 ஜூலை 05, சனிக்கிழமை

விநாயகர் குடியிருப்புப் பாலத்தை புனரமைக்குமாறு வேண்டுகோள்

George   / 2015 மே 25 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, ஸ்கந்தரபுரம் விநாயகர் குடியிருப்பு பிரதான வீதியில் ஆபத்தான நிலையிலுள்ள மரப்பாலத்தை புனரமைத்து தருமாறு விநாயகர் குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட இந்த வீதியை விநாயகர் குடியிருப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றனர். வீதியில் அமைந்துள்ள மரத்திலான பாலம் மிகவும் சேதமடைந்து இருக்கின்றது.

1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மரப்பாலம் இன்று வரை புனரமைப்பின்றி அப்படியே இருக்கின்றது. இதனைப் புனரமைத்துத் தருமாறு பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லையென கிராம அபிவிருத்திச் சங்கம் கூறியது.

பிரதேச சபையில் போதியளவு நிதி இல்லாமையால்   வீதியையும் மரப்பாலத்தையும் புனரமைக்க முடியவில்லை. நிதி கிடைத்ததும்; அவை புனரமைக்கப்படும் என கரைச்சி பிரதேச சபை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .