2025 ஜூலை 05, சனிக்கிழமை

அன்னதான மடத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

George   / 2015 மே 25 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில் அமைந்துள்ள மடுக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்துக்கு அன்னதான மடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று(25) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றது.

மடுக்கரை கிராம மக்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரின் நிதி உதவியுடன் இந்த மடம் அமைக்கப்படவுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன், தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) முக்கியஸ்தர் ஜஸ்ரின்  மற்றும் ஆலய முக்கியஸ்தர்கள் இணைந்து அடிக்கல்லினை நாட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .