2025 ஜூலை 05, சனிக்கிழமை

பழுதடைந்த மீன்கள் விற்கப்படுவதாக முறைப்பாடு

George   / 2015 மே 26 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, விசுவமடு பொதுச்சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக விசுவமடு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் நுகர்வோர் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் முறையிட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக குளிரூட்டியில் வைக்கப்பட்ட பழுதடைந்த மீன்கள் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன.

விசுவமடு பகுதியிலுள்ள பல கிராமங்களின் மீன் தேவையை பூர்த்தி செய்யும் இச்சந்தையில் இவ்வாறு பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமையால் தரமான மீன்களை நுகரமுடியவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தரமான மீன்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .