Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
George / 2015 மே 26 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட ஜிம்றோன் நகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை(24) நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தல் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனான அன்டனி ஜூட் கெவின்(வயது-15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தீ பாரிய அளவில் பரவியதை உணர்ந்து கொண்டவர்கள் உடனடியாக எழுந்து கத்தி கூக்குரலிட அயலவர்கள் விரைந்து வந்து குறித்த ஐவரையும் காப்பாற்றினர். எனினும் தாய் மற்றும் இரண்டு மகன்கள் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏனைய இரு மகள்களுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக திங்கட்கிழமை(25) காலை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். தாய் மற்றும் மற்றைய மகன் ஆகிய இருவரும் மன்னார் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago