2025 ஜூலை 05, சனிக்கிழமை

விசுவமடுவில் முன்பள்ளி அமைக்கப்பட வேண்டும்

Kogilavani   / 2015 மே 26 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, பாரதிபுரம் கிராமத்தில் முன்பள்ளியொன்றை அமைத்துத் தருமாறு விசுவமடு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் மேற்படி கிராமத்தில் முன்பள்ளி இல்லாமையால் இப்பகுதியைச் சேர்ந்த சிறார்கள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்கவேண்டிய நிலையுள்ளது. தூரத்தைக் கருத்திற்கொண்டு பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முன்பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர்.

இதனால் சிறுவர்கள் தங்கள் பால்யகால கல்வியை மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்தப் பகுதியில் ஒரு முன்பள்ளியை அமைத்துத் தருமாறு அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .