2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்

Sudharshini   / 2015 மே 26 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 7 வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

பரந்தன் பகுதியிலுள்ள பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகிலுள்ள மலசலகூடம் ஒன்றுக்குள் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேக நபர், சிறுமியின் வாய்க்குள் துணியை வைத்து அடைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாருக்கு கூறிய நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .