2025 ஜூலை 05, சனிக்கிழமை

இந்திய வீட்டுத்திட்டம் கிளிநொச்சியில் மேலும் தேவை

Suganthini Ratnam   / 2015 மே 27 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டம் தேவைப்படுவதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கோரிக்கை  விடுத்துள்ளார்.

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இந்தக்  கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய வீட்டுத்திட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசியமானது எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், கண்டாவளை பிரதேசத்தில் சில கிராம அலுவலர் பிரிவுகளில் காணப்பட்ட காணிப் பிணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு காணிப்பிணக்குகள் தீர்க்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் தேவையாகவுள்ளதாக கூறினார்.
இந்தச் சந்திப்பில் துணை கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தியும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .