2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மணியங்குளத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதாக விசனம்

George   / 2015 மே 27 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மணியங்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகளவில்  இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கிளிநொச்சி பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மகேந்திரா தெரிவித்திருந்தார்.

கசிப்பு காய்ச்சும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை பொதுமக்கள் அடையாளப்படுத்தி தரும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

மணியங்குளம் அலகரைப் பகுதியிலுள்ள பற்றைக்காடுகளில் கசிப்பு உற்பத்திகள் அதிகமாக இடம்பெறுகின்றமையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கசிப்பை கிராமங்களுக்கு கொண்டு வந்து இரகசியமான முறையில் விற்பனை செய்யப்படுவதையும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறான கசிப்பு உற்பத்தியால் சிறுவர்களும் அதற்கு அடிமையாகும் நிலை கிராமங்களில் தோன்றியுள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரினர்.

அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று கசிப்பு உற்பத்தி செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, கசிப்பு உற்பத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .